எல்லாம் நல்லபடி நடக்கும்.....
தேடிச் சோறு நிதந்தின்று
பல சின்னச் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ!
-பாரதியார்
இந்த வரிகளை கேட்க நேரும் போது அனைவருக்கும்மான விருப்பம் என்னவாக இருக்கம், எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயற்கை . சரி, என்ன செய்வது? எதை செய்வது? யார் வழிகாட்டுவார்? இப்படியான குழப்பங்களுடன் ஓடீக்கொண்டிருக்கும் போது நாம் நம் செயல்களை திரும்பி பார்போமேயானால்,முதலில் தோன்றும் கேள்வி நாம் வந்த பாதை சரியா? என்பதே! சரியாய் இருக்கும் பட்சத்தில் வெற்றி என்பது நம்முடையதாகிறது. ஆனால் அப்படி அமையாத போது நமக்கு ஏற்படுவது தோல்வி, கஷ்டம், மனக்கவலை, நெருக்கடி,நிம்மதியற்றநிலை,இன்று அனேகம்பேர் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலை இதுவே.வாழ்வின் பிரச்சினைகளை,நாம் சற்று அலசிப் பார்த்தோமானால், இலக்கு எது என்பதே தெரியாமல் வெளி உலகிலிருந்து துாண்டப்படும் உணர்ச்சி மிகுதியால், தெளிவான எண்ணங்கள் இல்லாமல் செயல்படும் போது வெற்றி என்பது எட்டாக்கனியாகிவிடுகிறதுது.ஒரு சாலையில் நடந்து செல்லும் போது "ஓடீ ஓடீ உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்" என்ற பாடலை கேட்க்கும் போது மனம் ஊழைப்பின் மீது அக்கறை கொள்கிறது. சிறிது துாரம் சென்ற பிறகு "பொண்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்" என்ற பாடலை கேட்க்கும் மனம் அதிர்ஷ்டத்தை தேடி ஓடுகிறது. இப்படியான குழப்பங்களோடு வெற்றி கோட்டை தொடமுடியாது.அப்படியானால் அதை அடைவதற்க்கு என்ன செய்ய வேண்டும்.
மனதில் எண்ணங்கள் வலிமை பெற்று எழும் பொழுது தான் உறுதி பிறக்கும்.
பேசுவோம்...
Wednesday, July 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in